×

படேல் பிறந்தநாளில் இளைஞர்களுக்கான இணையதளம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: தேச கட்டமைப்பில் இளைஞர்கள் பங்கு பெறும் வகையில் மேரா யுவ பாரத் என்ற இணையதளம் நாளை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசுகையில், ‘‘ நாளை சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளாகும். அந்த நாளில் இளைஞர்களுக்காக மேரா யுவ பாரத் என்ற இணையதளம் தொடங்கப்படும். இதற்காக, mybharat.Gov.in என்ற இணையதளத்தில் இளைஞர்கள் பதிவு செய்ய வேண்டும். பாரதத்தின் இளைஞர்களை தேச நிர்மாணத்தின் பல்வேறு திட்டங்களில் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பம் அளிக்கும். வளர்ந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் நாட்டின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டும் முயற்சியாகும். இளைஞர்கள் அனைவரும் பதிவு செய்து,தேச நிர்மாண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அக். 31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலமான நாள். அவருக்கும் என்னுடைய உணர்வுபூர்வ நினைவஞ்சலியை அர்ப்பணம் செய்கிறேன்’’ என்றார்.

The post படேல் பிறந்தநாளில் இளைஞர்களுக்கான இணையதளம்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Patel ,PM Modi ,New Delhi ,Mera Yuva Bharat ,Dinakaran ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...