×

சட்டீஸ்கரை 5 ஆண்டு கிரகணம் பிடித்திருந்தது: காங். ஆட்சி பற்றி ஜே.பி. நட்டா விமர்சனம்

டொங்கர்கார்: சட்டீஸ்கரில் 5 ஆண்டுகள் கிரகணம் பிடித்திருந்தது என்றும் மாநில காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். சட்டீஸ்கரில், நவ.7 மற்றும் 17 ம் தேதிகளில் 2 கட்டமாக சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் டொங்கர்காரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில்,‘‘ காங்கிரஸ் கட்சி மக்களுக்கான நன்மை பற்றி நினைக்காமல் தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தான் யோசித்து கொண்டிருக்கிறது. தங்களுடைய நலனுக்கான ஆட்சி வேண்டுமா அல்லது மக்களின் நலனுக்கான ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் காங்கிரசை சேர்ந்த தலைவர்களான அர்ஜூன் சிங், மோதிலால் வோரா,சியாமா சரண் சுக்லா ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். ஆனால் கடந்த 2000ம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய பிரதேசத்தை 2 ஆக பிரித்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாகியது. முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன.நேற்றுமுன்தினம் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சட்டீஸ்கரை 5 ஆண்டு கிரகணம் பிடித்திருந்தது. மாநில அரசை அகற்ற வேண்டும் ’’ என்றார்.

The post சட்டீஸ்கரை 5 ஆண்டு கிரகணம் பிடித்திருந்தது: காங். ஆட்சி பற்றி ஜே.பி. நட்டா விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Dongargarh ,Congress government ,BJP ,Congress ,JP ,
× RELATED சட்டீஸ்கரில் பயங்கரம் மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி