×

வி.சி.க. நிர்வாகி விக்ரமன் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவுப்படி மகளிர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 20ம் தேதி பெருங்குடி பகுதியை சேர்ந்த கிருபா முனுசாமி (37) ஒரு புகார் அளித்தார். அதில், நான் லண்டனில் படித்துவிட்டு தற்போது உச்ச நீதிமன்ற மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். எனக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் நட்பு கிடைத்தது. நான் சட்டக்கல்லூரியில் படிக்கும் போது பல உதவிகள் செய்தார். பல வகையில் என்னிடம் ரூ.13.7 லட்சம் பணம் வாங்கினார். புதிதாக கார் வாங்கப்போவதாக கூறினார். புதிய கார் வாங்கும் அளவிக்கு பணம் இருப்பதால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன். இதனால் தகராறு ஏற்பட்டது. என்னை சமாதானம் செய்து, கடந்த மார்ச் 31ம் தேதி திருக்கோவிலூர் சென்றோம். நள்ளிரவில் ஒன்றாக தங்கினோம். அப்போது என்னுடன் நெருக்கமாக இருந்தார். பிறகு என்னுடனான நட்பை விட்டு விலகினார்.

என்னிடம் பல தவணைகளில் வாங்கிய ரூ.13.7 லட்சத்தில் ரூ.12 லட்சம் திரும்ப கொடுத்தார். மீதமுள்ள ரூ.1.7 லட்சம் தரவில்ைல. அதை கேட்டபோது, மிகவும் ஆபாசமாக பேசியும், சாதி பெயரை கூறியும் உதாசீனப்படுத்தினார். எனவே விக்ரமன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். உயர் அதிகாரிகள் உத்தரவின்படி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் கிருபா முனுசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பெண் வக்கீல் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து விக்ரமன் மீது இந்திய தண்டனை சட்டம் நம்பிக்கை மோசடி, மோசடி, பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வி.சி.க. நிர்வாகி விக்ரமன் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவுப்படி மகளிர் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vikraman ,Chennai ,Chennai Municipal Police Commissioner ,Krupa Munusamy ,Perungudi ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...