×

வாடிகனில் ஆயர்கள் கூட்டம் கத்தோலிக்க திருச்சபையில் விரைவில் பெண்களுக்கு நிர்வாகப் பொறுப்பு: போப் பிரான்சிஸ் ஆலோசனை

வாடிகன்: ரோம் நகரில் நடந்த கத்தோலிக்க ஆயர்கள் கூட்டத்தில் திருச்சபையில் விரைவில் பெண்களுக்கு நிர்வாகப் பொறுப்பு வழங்குவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையை சாமானிய மக்கள் அதிக பங்கு வகிக்கும் வரவேற்கத்தக்க இடமாக மாற்றுவதற்கான சீர்திருத்த முயற்சியாக போப் பிரான்சிஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க ஆயர் சபையின் கூட்டத்தை கூட்டினார். இதனால் திருச்சபையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வாடிகனில் கத்தோலிக்க திருச்சபையின் எதிர்காலம் குறித்து போப் பிரான்சிஸ் தலைமையில் கடந்த ஒருமாதமாக நடந்த விவாதம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

அதன்படி, கத்தோலிக்க திருச்சபையில் பெண்களுக்கு அதிகளவிலான நிர்வாகப் பொறுப்புகளை வழங்குவது, ஒரு வருடத்திற்குள் பெண்களை உதவி பணியாளர்களாக அனுமதிப்பது, ஓரின சேர்க்கையாளர்களுக்கு வரவேற்பது உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கூறிய பிரச்னைகள் குறித்த 42 பக்க உரையின் ஒப்புதலுடன், முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டன. இவற்றை அடுத்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது அமர்வில் பரிசீலிக்கப்படுவதற்கு முன் போப் பிரான்சிஸ் பரிசீலிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாடிகனில் ஆயர்கள் கூட்டம் கத்தோலிக்க திருச்சபையில் விரைவில் பெண்களுக்கு நிர்வாகப் பொறுப்பு: போப் பிரான்சிஸ் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Bishops' ,Vatican ,Catholic Church ,Pope Francis ,Catholic ,Rome ,Dinakaran ,
× RELATED போப் உடல்நிலை பாதிப்பு