×

பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

விகேபுரம்,அக்.29: பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு என்கே, எஸ்கே மற்றும் நதியுன்னி கால்வாய்களில் நவம்பர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகேயனிடம் மூன்று கால்வாய்களின் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மாரிமுத்து கோரிக்கை மனு அளித்தார். அதில், ஏற்கனவே கார் சாகுபடிக்கு மூன்று கால்வாய்களிலும் சரிவர தண்ணீர் திறக்காத காரணத்தால் முறையாக பயிர் செய்ய இயலவில்லை. ஆகவே விவசாயிகள் அதிக பாதிப்பில் இருந்து வருகின்றனர். ஆகவே பிசான சாகுபடிக்கு நவம்பர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Papanasam dam ,Pisana ,Vikepuram ,NK ,SK ,Nadiunni ,Dinakaran ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில்...