×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கோரிக்கை அறிவை பெருக்கி கொள்ளும் வகையில் மாணவர்கள் சிறந்த புத்தகங்களை படிக்க வேண்டும்

புதுக்கோட்டை: அறிவை பெருக்கு கொள்ளும் வகையில் மாணவர்கள் சிறந்த புத்தகங்களை படிக்க வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திருமயம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை மேம்படுத்தி வருகிறார். மேலும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வது மட்டுமின்றி, சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அறிவை பெருக்கிக்கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கோரிக்கை அறிவை பெருக்கி கொள்ளும் வகையில் மாணவர்கள் சிறந்த புத்தகங்களை படிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Mercy Ramya ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில்...