×

கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை நாயகர் கலைஞர் என்னும் தலைப்பில் நடைபெற்று விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையின் அரசு தலைமை கொறடா கோவை செழியன், நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் உதயம் முருகையன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் சுந்தரராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் வரவேற்றார். பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியி்ல் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

The post கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Symposium ,Vedaranyam ,Karunanidhi Centenary Celebration Seminar ,Vedaranyam Taluka Ayakaranpulam Government Girls Higher Secondary School.… ,Artist Centenary Celebration Seminar ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...