×

மேலும் அவகாசம் தர மறுப்பு எம்.பி மஹுவா மொய்த்ரா நவ.2ல் கட்டாயம் ஆஜராக வேண்டும்

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்துகிறது. மொய்த்ரா நாளை மறுதினம்(அக்.31) நேரில் ஆஜராகும்படி நெறிமுறைகள் குழு சம்மன் அனுப்பியது. ஆனால் தன் தொகுதியில் நவம்பர் 4ம் தேதி வரை துர்கா பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டி உள்ளதால் 31ம் தேதி ஆஜராக முடியாது. நவம்பர் 5ம் தேதிக்கு பிறகு வேறொரு தேதியில் ஆஜராவதாக கடிதம் எழுதியிருந்தார்.

மொய்த்ராவின் கடிதத்துக்கு நெறிமுறைகள் குழு பதில் அனுப்பி உள்ளது. அதில் மஹுவா நவம்பர் 2ம் தேதி கண்டிப்பாக நெறிமுறைகள் குழுவில் ஆஜராக வேண்டும். வேறு காலஅவகாசம் எதுவும் தர முடியாது என தெரிவித்துள்ளது.

The post மேலும் அவகாசம் தர மறுப்பு எம்.பி மஹுவா மொய்த்ரா நவ.2ல் கட்டாயம் ஆஜராக வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mahua Moitra ,New Delhi ,Trinamool Congress ,Darshan ,Parliament ,Adani Group ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!