×

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

திருவள்ளூர், அக். 29: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாசு கடை பல்வேறு நிபந்தனைகளுடன் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லரை வியாபாரிகள், பட்டாசு வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இது போன்று விற்பனை செய்யும் கடைகளில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடையருகே எளிதில் தீப்பற்றக்கூடிய சாதனங்கள், மின்மாற்றி, பெட்ரோல் பங்க் ஆகியவை உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கடையில் பட்டாசுகள் இருப்பு வைக்கும் இடம் மற்றும் கடைகள் நடத்துவதற்கு உரிமம், தீப்பற்றினால் எளிதில் அணைக்கும் வகையில் தண்ணீர் வாளிகள் உள்ளதா, கடைகளுக்கு 2 வழி, தீயணைப்பு கருவி ஆகியவைகள் உள்ளனவா என்பது குறித்து அவர் பார்வையிட்டார். மேலும் விபத்துக்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது, ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்ய கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Kotaksiyar ,Tiruvallur ,Diwali ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை