×

வில்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக விழா

தர்மபுரி, அக்.29: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, தர்மபுரியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோயில், கடைவீதி மருதவாணேஸ்வரர் கோயில், குமாரசாமிபேட்டை ஆனந்த நடராஜர் கோயில், ஆத்துமேடு நஞ்சுண்டேஸ்வரர் கோயில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில், சுவாமிக்கு அன்னாபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கடகத்தூர் சோழவராயன் ஏரி அருகே உள்ள வில்வநாயகி அம்மை சமேத வில்வநாதர் கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. முன்னதாக வில்வநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் செய்தனர். காய்கறிகள், பழங்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post வில்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Annabhishek ,Vilvanathar Temple ,Dharmapuri ,Aippasi ,Shiva ,Annabishek ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு