×

ஐப்பசி மாத பவுர்ணமி விழா குமரி சிவாலயங்களில் அன்னாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்

நாகர்கோவில், அக்.29: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐப்பசி மாதம் பவுர்ணமி சிவபெருமான் வழிபாட்டு உகந்த நாளாகும். இந்த நாளில் சிவாலயங்களில் மூலவருக்கு அன்னத்தாலேயே அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெறும். மூலவரின் திருமேனி முழுவதும் அன்னம் கொண்டு சந்தனகாப்பிடுவது போல அலங்கரிப்பர். இந்த அலங்காரத்தில் சிவனை தரிசனம், செய்வது கோடி புண்ணியம் ஆகும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. அதன் படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவரின் திருமேனியை அன்னத்தால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதே போல் ஒழுகினசேரி சோழராஜா கோயிலில் நடந்த அன்னாபிஷேக பூஜையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இளநீர், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் அபிஷேக அன்னத்தை பிரசாதமாக வழங்கினர். முன்னதாக பழையாற்றுக்கு கொண்டு சென்றும் அபிஷேக அன்னம் கரைக்கப்பட்டது. அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அன்னாபிஷேகம் நடப்பதாக தெரிவித்தனர்.

The post ஐப்பசி மாத பவுர்ணமி விழா குமரி சிவாலயங்களில் அன்னாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Annabishekam ,Kumari ,Aippasi month ,Nagercoil ,Annabhishekam ,Aippasi month… ,Aippasi month full ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...