×

மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் இருந்து கடந்த 1ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க 12 மீனவர்கள் சென்றனர். அவர்கள் சென்ற படகு கடந்த 23ம் தேதியன்று தினாது தீவு அருகே இருந்தபோது, மாலத்தீவு கடலோர காவல் படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாலத்தீவு அதிகாரிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரையும், அவர்களது மீன்பிடி படகையும் விடுவித்திட ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Maldivian Coast Guard ,Chief Minister ,M.K.Stal ,Union Minister ,Chennai ,M.K.Stalin ,Union ,External Affairs Minister ,Jaishankar ,Thoothukudi district ,Daruwaikulam ,Dinakaran ,
× RELATED உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட...