×

ஓ.பி.சி. ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?: சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கேள்வி

சத்தீஸ்கர்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சி அமைத்த 2 மணி நேரத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கை தொடங்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த வாக்குறுதியை அளித்தார். சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சாதிவாரி மக்கள் தொகை ஆய்வு நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ராகுல் இதர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பாஜக அஞ்சுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களையும் மோடி அரசு வெளியிடாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதர, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் பெற்றிருக்க வேண்டிய பிரதிநிதித்துவம் தற்போது இந்தியாவில் அவர்களுக்கு கிட்டவில்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

இந்த உண்மையை ஓ.பி.சி. இளைஞர்கள் அறிய கூடாதபடி மறைக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதற்கிடையே அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். மத்திய பிரதேச மக்களுக்கு சாலைகள், தண்ணீர், மின்சாரம் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். ஆனால், இவைகளை வழங்காமல் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்று பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஓ.பி.சி. ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்?: சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Jatiwari ,Rahul Gandhi ,Chhattisgarh ,I.N.D.I.A. Jatiwari ,O. B. ,Dinakaran ,
× RELATED எனது தலைமையிலான அரசு ஹாட்ரிக் வெற்றி...