×

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பு: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!!

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 25%ம் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மேலும் 5% குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது எவ்வித புகாரும் இன்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதே சமயம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக புகார் தெரிவிக்க 94445014450, 9445014436 என்ற எண்களை அழைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5% கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளின் புதிய கட்டண விவரம்;

சென்னை – கோவை இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1725, அதிகபட்ச கட்டணம் ரூ.2874
சென்னை – சேலம் இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1363, அதிகபட்ச கட்டணம் ரூ.1895
சென்னை – நெல்லை இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960, அதிகபட்ச கட்டணம் ரூ.3268
சென்னை மதுரை இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1688, அதிகபட்ச கட்டணம் ரூ.2554
சென்னை – திருச்சி இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1325, அதிகபட்ச கட்டணம் ரூ.1841-
சென்னை – நாகர்கோவில் இடையே ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2211, அதிகபட்ச கட்டணம் ரூ.3765

The post தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பு: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Omni bus ,Diwali festival ,Omni Bus Owners Association ,Chennai ,Diwali ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து