×

ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

நாகர்கோவில்: ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் வெற்றிகரமாக செயற்படுத்த அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது இஸ்ரோ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றி இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நாகர்கோவிலில் பேட்டியளித்தார். ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முதலில் ஆள் இல்லாதா விண்கலம் ஏவப்படும் எனவும், பிறகு ரோபோக்கள் அனுப்பப்படும் எனவும் சிவன் கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மொத்தம் 2400 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக சிவன் கூறினார. மீதமிருக்கும் 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இன்னும் 2 மாதங்களில் தமிழ்நாடு அரசு கொடுக்கும் என்று நம்புவதாகவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

The post ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Gaganyaan ,ISRO ,Sivan Petty ,Nagercoil ,Sivan Patti ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...