×

சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால் திருப்பதி, ஸ்ரீரங்கம், மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் நடை அடைப்பு!!

சென்னை : சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஐப்பசி பவுர்ணமி தினமான இன்று வானில் தென்படுகிறது. இந்த கிரகணம் நள்ளிரவில் 1:05 மணிக்கு துவங்கி 2:24 மணிக்கு முடியும். கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் இருக்கும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும். சந்திர கிரகண நேரம் தோஷ காலமாக கருதப்படுவதால் பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று மாலை 05:30 மணிக்கு நடை அடைக்கப்படும்

*அக்டோபர் 29 நள்ளிரவு 1:05 மணி முதல் 2:23 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்படும்.

*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று இரவு 07 மணி முதல் அதிகாலை 3:15 வரை நடை அடைக்கப்படும் .

*அழகர்கோயில் மற்றும் இக்கோயிலின் உபகோயில்களில் மாலை 6 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும்.

*திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு

*பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும். 29ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

*சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி தினமான இன்று மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும்

*அதே நேரத்தில் கிரகண நேரங்களில் திருநள்ளாறு சனிபகவான் ஆலயம், காளஹஸ்தி, ராகு கேது தலங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால் திருப்பதி, ஸ்ரீரங்கம், மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் நடை அடைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Srirangam ,Meenakshi ,Amman ,Lunar Eclipse ,Chennai ,Tamil Nadu ,Earth ,
× RELATED பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி...