×

மானூர் அருகே முதியவர் போக்சோவில் கைது

மானூர்,அக்.28:மானூர் அருகே துலுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி முத்துச்செல்வி (25). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சோமசுந்தரம் (65) என்பவர் அவரது 3 வயது ஆண் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மானூர் போலீஸ் நிலையத்தில் முத்துச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து சோமசுந்தரத்தை கைது செய்தார்.

The post மானூர் அருகே முதியவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Manoor ,Manur ,Murthy ,Muthuchelvi ,Tulkarpatti ,
× RELATED மானூர் அருகே பெண்ணை தாக்கியவர் கைது