×

பள்ளி மாணவர்கள் பங்கேற்பு போனஸ் வழங்க கோரி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த துரையரசபுரத்தில் இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பண்டிகை கால போனஸ், இனிப்பு, பலகாரம் மற்றும் பண்டிகால அட்வான்ஸ், நிரந்தர தொழிலாளி, தின கூலி தொழிலாளி என்று பாகுபாடு இன்றி வழக்கம் போல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்பாலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராதா செல்வமணி முன்னிலை வைத்தார். போனஸ், அட்வான்ஸ், பண்டிகை வேலை, பலகாரங்கள், தொழிலாளிக்கு வழக்கம் போல் வழங்க வேண்டும்.

The post பள்ளி மாணவர்கள் பங்கேற்பு போனஸ் வழங்க கோரி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Pudukkottai District Cooperative Museum ,Durayarasapura ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று...