×

போடியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணல் 450 பேர் பங்கேற்பு

போடி, அக். 28: போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் திமுக இளைஞரணி மண்டலம் 8ல் தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் நகர் ஒன்றிய பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார், போடி முன்னாள் எம்.எல்.ஏவும், போடி மேற்கு ஒன்றிய செயலாளருமான லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ராஜா தலைமையில் மாநில துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரசாத், சீனிவாசன், நந்தகுமார் ஆகியோர் நேர்காணல் செய்தனர்.

இதில் 450 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வடக்கு மாவட்டம் இளைஞரணி அமைப்பாளர் ஆஜீப்கான், துணை அமைப்பாளர்கள் பரணி, ஜெயக்குமார், செல்லத்துரை, தெய்வேந்திரன், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சூரி செல்வம், துணை அமைப்பாளர்கள் சுகுமார், அபதாஹீர், பிரபாகரன், முருகன், ராமகிருஷ்ணன், மாரத்தான் ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர். இதுகுறித்து சென்னைக்கு தலைமைக்கு அனுப்பப்பட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சரும், மாநில இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனையில் விரைவில் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post போடியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணல் 450 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Bodi ,DMK Youth ,Mandal 8 ,Theni North ,Bodi Munthal Road ,Dinakaran ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு