×

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா

சிங்கம்புணரி, அக். 28: சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை கல்வி சுற்றுலாவாக கலைஞர் நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் என்று பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். அதன்படி பள்ளி மாணவர்களை கலைஞர் நூலகத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து துணைத் தலைவர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர். செந்தில் கிருஷ்ணன் 50 மாணவர்களை இரண்டு வேன்களின் நூலகத்திற்கு அழைத்து சென்று நூலகத்தை பார்வையிட்டனர். இதில் மேலாண்மை குழு தலைவர் தென்றல் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Govt Boys High School ,Artist Centenary ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி