×

நாகப்பட்டினம் / மயிலாடுதுறை ஞாயிறு தோறும் படியுங்கள் சீர்காழி அருகே மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது

சீர்காழி: சீர்காழி அருகே மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி தத்தங்குடி மேல தெருவில் வசிப்பவர் சம்பந்தம். இவரது மகன் பாலு (50). இவர் செங்கல்சூளையில் கல் அறுக்கும் தொழிலாளி. இவரது மகள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பவானி. பவானியை, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கனகராஜ் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கனகராஜ் மாமனார் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கனகராஜ் தனது மாமனார் பாலுவிடம் சொத்து பிரித்து கொடுத்தமாறு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் கனகராஜ் மாமனார் பாலுவை நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார் படுகாயம் அடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார்.

The post நாகப்பட்டினம் / மயிலாடுதுறை ஞாயிறு தோறும் படியுங்கள் சீர்காழி அருகே மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Mayiladuthurai ,Sirkazhi ,Nimmeli ,Sirkazhi, ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...