×

கடவூர் தெற்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள், பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கானஆய்வுக்கூட்டம்

தோகைமலை: கடவூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பாக பாக முகவர்கள் பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கான (பிஎல்ஏ2) ஆய்வுக்கூட்டம் கடவூர் தெற்கு ஒன்றிய செயலா ளர் வீராச்சாமி(எ)சுதாகர் தலைமையில் நடந்தது. பாலவிடுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகப்பிரியா திருவேங்கடம், குமரேசன், மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாமக்கல் ராணி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

 

The post கடவூர் தெற்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள், பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கானஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kadavur South Union DMK ,Thokaimalai ,Kadavur South Union ,DMK ,Booth Committee Executives ,Dinakaran ,
× RELATED தோகைமலை ஒன்றியம் கழுகூர், சேப்ளாப்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்