×

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசும் பாஜ: வீடியோ ஆதாரம் உள்ளதாக எம்எல்ஏ அதிரடி

பெங்களூரு: தாவணகெரேவில் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கணிக செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க செயல்பட்ட கும்பல், எப்படி பணம் மற்றும் பதவி ஆசை காட்டி 17 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி கவிழ்த்தார்களோ? அதே கும்பல் தற்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மைசூரு, பெலகாவி, ஹாசன் உள்பட நான்கு திசையிலும் அந்த கும்பல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வருகிறது.

அந்த கும்பலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு உதவியாளராக இருந்த ஒருவரும், மைசூரு மற்றும் பெலகாவி பகுதியை சேர்ந்த தலா இருவரும் உள்ளனர். மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கலைப்போம் என்று கூறி வரும் கும்பல், எங்கள் கட்சி எம்எல்ஏகளிடம் ரூ.50 கோடி கொடுக்கிறோம். அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கிறோம். பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்து சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வைக்கிறோம். தேவையான பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று கூறி வருகிறார்கள. இதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. தக்க சமயத்தில் அதை வெளியிடுவேன். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுவரும் நயவஞ்சக சூழ்ச்சி வலையில் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவும் விழவில்லை என்பது அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது என்றார்.

The post கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசும் பாஜ: வீடியோ ஆதாரம் உள்ளதாக எம்எல்ஏ அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka Congress ,Bengaluru ,Ravikumar Kanika ,Congress ,Mandya Constituency ,Thavanagere ,Karnataka ,Majda- ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...