×

போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: ஓசூர் அருகே பரபரப்பு

ஓசூர்: ஓசூர் அருகே போலீசை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாம்தார் உசேன்(34), மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஓசூர் பகுதியிலும் நாம்தார் உசேன் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக வழக்குகள் உள்ளன. ஓசூர் ஹட்கோ போலீசார் ஆந்திர மாநிலத்துக்குச் சென்று நாம்தார் உசேனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிடித்து வந்துள்ளனர்.

ஓசூர் திருப்பதி மெஜஸ்டிக் என்ற குடியிருப்பு பகுதிக்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது நாம்தார் உசேன் தப்ப முயன்றார். மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து 3 போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது நாம்தார் உசேன் மீது துப்பாக்கிச் குடு நடத்தப்பட்டது. தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் வினோத், தலைமை காவலர் ராமசாமி, காவலர் வெளியரசுவுக்கு காயம் ஏற்பட்டது. 3 போலீசார் மற்றும் வலது காலில் குண்டு பாய்ந்த காயத்துடன் நாம்தார் உசேனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: ஓசூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Hosur ,Riot ,Osur ,Dinakaran ,
× RELATED ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’...