×

நான்கு வழி சாலைக்காக புத்தேரி குளத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரம்


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடப்பில் கிடந்த நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. கடந்த மே மாதம் ரூ.1041 கோடியே 30 லட்சத்திற்கு மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக நீர் நிலைகள் மீது பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. காரோடு முதல் கன்னியாகுமரி இடையே ஆங்காங்கே 24 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் அமைப்பதுடன், 35 குளங்கள் உள்பட சிறிய மற்றும் பெரியது என 60 பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது காரோடு – கன்னியாகுமரி இடைப்பட்ட பகுதியில் புத்தேரியில் சிறு கல்வெட்டு பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

கணியான்குளம் – புத்தேரி இடையே பணிகள் நடக்கின்றன. இங்குள்ள குளத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது இந்த இடைப்பட்ட பகுதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, முதற்கட்டமாக சிறு, சிறு கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இது குறித்து நகாய் அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 56.36 சதவீதம் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. அதாவது 30.274 கி.மீ. பணிகள் முடிந்துள்ளன. இவை தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது, சிறிதாக முடிக்கப்பட்டுள்ளது. ன்னும் 24.05 கி.மீ. பணிகள் பாக்கி உள்ளது. இந்த பணிகளை முடிப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 2025 செப்டம்பரில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

The post நான்கு வழி சாலைக்காக புத்தேரி குளத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Putheri Pond ,Nagercoil ,Kanyakumari district ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி