×

சாணார்பட்டி பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் செவ்வந்தி: சாகுபடி அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, ராஜக்காபட்டி ஊராட்சியில் உள்ள கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மஞ்சள் செவ்வந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி என இருவகைகள் உள்ளன. இதில், மஞ்சள் செவ்வந்தி இப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்த 4 மாதங்களில் பலன் தரும். மாலை கட்டப் பயன்படும் செவ்வந்தி பூக்களின் தேவை பண்டிகை, திருவிழா மற்றும் முகூர்த்த காலங்களில் அதிகமாக இருக்கும். கடந்த ஆயுதபூஜையின் போது சந்தைகளில் ஒரு கிலோ செவ்வந்தி ரூ.200 முதல் 300 வரை விற்பனையாது.

தற்போது தேவை குறைந்ததால் விலை சரிந்து ஒரு கிலோ செவ்வந்தி ரூ.80 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனையாகிறது. விரைவில் தீபாவளி, சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில், செவ்வந்தி பூக்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த ஆண்டு போதிய மழை மழை இல்லாததால் செவ்வந்தி குறைந்த அளவில் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு பருவமழை சரியாக பெய்ததாலும், கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதிய தண்ணீர் இருப்பதாலும், செவ்வந்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

The post சாணார்பட்டி பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் செவ்வந்தி: சாகுபடி அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chanarpatty ,Gopalpatty ,Kalupatti ,Rajakkapati Uradchi ,Sanarpatty, Dindigul district ,
× RELATED பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி...