×

முறைகேடு புகார்: ஒன்றிய ஆணையர் உட்பட 6 பேரை சஸ்பெண்ட் செய்து மதுரை ஆட்சியர் உத்தரவு..!!

மதுரை: முறைகேடு புகாரில் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் உட்பட 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 4 பேர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் என 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கிராம வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்து லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

The post முறைகேடு புகார்: ஒன்றிய ஆணையர் உட்பட 6 பேரை சஸ்பெண்ட் செய்து மதுரை ஆட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Collector ,Madurai ,Chellambatti ,Rama ,Usilambatti ,Dinakaran ,
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...