×

இந்தியா – மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு எதிரான சதி?… அமெரிக்க அதிபர் கருத்து


வாஷிங்டன்: இந்தியா – மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு எதிராக, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அமெரிக்க அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அளித்த பேட்டியில், ‘தீவிரவாதக் குழுவான ஹமாஸ் கூறும் உயிரிழப்பு எண்ணிக்கையில் தனக்கு நம்பிக்கையில்லை. இஸ்ரேல் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என பாலஸ்தீனியர்கள் கூறுவதில் நம்பிக்கை இல்லை. ஆனால், அங்கு அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒரு போரை நடத்துவதற்கான விலை.

இஸ்ரேலுக்கு எதிரான போரை பிரசாரம் செய்யும் மக்களிடையே, இஸ்ரேல் இனி கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் ெடல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதப் படையினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம்’ என அவர் கூறினார்.

The post இந்தியா – மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு எதிரான சதி?… அமெரிக்க அதிபர் கருத்து appeared first on Dinakaran.

Tags : India ,East ,Washington ,Hamas ,Israel ,Dinakaran ,
× RELATED சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவருக்கு...