×

கோட்சேவுக்கு கொடி பிடித்தவர்களின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்: துரை வைகோ பேட்டி


தூத்துக்குடி: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தூத்துக்குடியில் இன்று அளித்த பேட்டி: மத ரீதியாக, ஜாதி ரீதியாக தேவையில்லாத சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பேரவையில் பேசும்போது காமராஜர் பெயரைக் கூறாமல் விட்ட ஆளுநர் ரவி, தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளை மதிக்கவில்லை என்று கூறுவது தவறானது. சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி சார்பில் வழங்கப்படுவதற்கும் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை.

சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் பற்றிப் பேச அவருக்கு தகுதியில்லை. தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு கொடி பிடித்தவர்களுக்கு ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு சுதந்திரப் போராட்டத்தை பற்றியோ, சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றியோ கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. இந்தியா கூட்டணி ஐந்து மாநில தேர்தலில் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோட்சேவுக்கு கொடி பிடித்தவர்களின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Thoothukudi ,MDMK ,general secretary ,Governor ,Godse ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி