×

நீலகிரி புத்தக திருவிழா மாணவர்கள் கூட்டம் அலைமோதியது

ஊட்டி : ஊட்டியில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழாவின் எட்டாவது நாளான நேற்று ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை கண்டு, மகிழ்ந்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புத்தகத் திருவிழா நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி மாவட்டந்ேதாறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் இரண்டாவது நீலகிரி புத்தக திருவிழா – 2023-24 ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கடந்த 20ம் தேதி துவங்கியது.

இதனை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகத்தார்கள் புத்தகங்களை வைத்திருந்தனர். இதுதவிர பல்வேறு அரசுத்துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதுதவிர பல்வேறு எழுத்தாளர்கள், அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர மேலும் உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள்,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. புத்தக திருவிழாவின் எட்டாவது நாளான நேற்றும் அரங்குகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு ேதவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.
பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தமிழ் கொஞ்சும் குறிஞ்சி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனை உறுப்பினர் கோவி லெனின், புத்தக வாசிப்பு குறித்து கவிஞர் சுகா ஆகியோர் பேசினர். தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றன.

The post நீலகிரி புத்தக திருவிழா மாணவர்கள் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Tags : Nilgiri Book Festival ,Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...