×

அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட டைனிங் ஹால்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தவாசல் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் அனிதா உள்பட 7 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுனர். இப்பள்ளி மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளை ஓரங்கட்டி மேம்பட்டு திகழ்கிறது. இவ்வூரிலிருந்து ஒருவர் கூட வெளியூர் பள்ளிகளுக்கு செல்வதில்லை. ஷூட் எனப்படும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக (ஸ்கூல் யுனிவர்சிட்டி இண்டஸ்ட்ரி டை அப் ஸ்கீம்) திட்டத்தின்கீழ், தமிழக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 600 பள்ளிகளில் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியும் உள்ளது. பல்கலைக்கழகம், தமிழக அளவில் டாப்டென் மாணவர்கள் என தேர்வு செய்த 10 பேர்களில் 4 பேர் இப்பள்ளி மாணவர்கள். இதன் மூலம் 5,6,7,8 வகுப்பு மாணவ, மாணவியருக்கான கல்விக் கட்டணத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமே செலுத்துகிறது. இங்கு 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி பாடமும், 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு அனிமேஷன் பயிற்சியும் பிரத்தியேகமாக அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பள்ளி வளாகத்திலேயே தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இளவழகன் ஆலோசனையில், சத்துணவுக்கு தேவையான காய்கறிகள் பள்ளியிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இப்பள்ளியில் பயிலும் 252 மாணவ, மாணவியரும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட வசதியாக ‘‘நவீன டைனிங் ஹால்” வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அருகில் ஒரு ஷெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடக்க உள்ளது….

The post அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட டைனிங் ஹால் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Kothavasal ,Periya Venmani ,Kunnam taluka ,Panchayat Union Middle School ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...