×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் நவம்பர் 1ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்: வரும் நவம்பர் 1ம் தேதி பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உமா அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக நவம்பர் 4ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிக்க வருகின்றனர். இந்த ஆஞ்சநேயர் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில், ஆஞ்சநேயர் பிறந்ததாக ஐதீகம். அதனால் ஆண்டு தோறும் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும். அதன்படி நடப்பாண்டில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா, 31-ந் தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.

4-ந் தேதி 10 மணிக்கு நரசிம்மர் நாமகிரி தாயார் திருக்கல்யாணம், 5-ந் தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, திருவேடு பரி உற்சவம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. 7-ந் தேதி சப்த வர்ணம் கஜலட்சுமி வாகனம் வீதி உலா, 8-ந் தேதி வசந்த உற்சவம், 9-ந் தேதி விடையாட்சி உற்சவம், 10-ம் தேதி புஷ்ப பல்லக்கு, 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 12-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உமா உத்தரவு அளித்துள்ளார். இதற்கு மாற்றாக நவம்பர் 4ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளனர்.

The post நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் நவம்பர் 1ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbapishekam ,Namakkal Anjaneyar Temple ,District Ruler ,NAMAKKAL ,NAMAKAL ANJANEYAR TEMPLE ,Dinakaran ,
× RELATED குன்னம் அத்தியூர் கிராமத்தில் மூப்பனார் கோயில் கும்பாபிஷேகம்