×

கோவையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 75 பேர் கைது

 

கோவை, அக்.27: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தெற்கு தாலுகா அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தமிழரசி, மாவட்ட செயலாளர் பயாஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6,750 வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மறியலில் ஈடுபட்ட 75 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், அவர்களை மாலையில் விடுவித்தனர்.

The post கோவையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 75 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Satthunavu ,Anganwadi ,Coimbatore ,Sathunavu ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...