×

கொடைரோடு அம்மையநாயக்கனூரில் ஏடிஎம்மில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு

நிலக்கோட்டை, அக். 27: கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் நிலக்கோட்டை மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக நேற்று முன்தினம் பொட்டிசெட்டிபட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவர் சென்றுள்ளார். அப்போது அவர் தனது ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் செலுத்தி பணம் எடுக்க முற்பட்டார். அப்போது பின் நம்பர் ஏதும் செலுத்தாமல் ஏடிஎம்மில் இருந்து தானாக ரூ.10 ஆயிரம் பணம் வெளியே வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், உடனே அப்பணத்தை எடுத்து கொண்டு அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சென்று போலீசார் ஒப்படைத்தார். விசாரணையில் ராஜேந்திரனுக்கு முன்பாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றவர் பணம் வருவதற்கு தாமதமாகவே பணம் வரவில்லை என நினைத்து சென்றிருப்பதும், ராஜேந்திரன் ஏடிஎம் கார்டை செலுத்தும் போது பணம் தானாக வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வங்கி மேலாளரை வரவழைத்து நடந்த விஷயத்தை கூறினர். தொடர்ந்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் மற்றும் ேபாலீசார் ராஜேந்திரனின் நேர்மையான செயலை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.

The post கொடைரோடு அம்மையநாயக்கனூரில் ஏடிஎம்மில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ammaiyanayakanur ,Kodairod ,Nilakottai ,Bank ,Nilakottai Main Road ,Dinakaran ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை