×

நிலக்கடலை சாகுபடியில் ரிச்பூஸ்டர் செயல் விளக்கம்

சிவகங்கை, அக்.27: சிவகங்கை அருகே தச்சன்புதுப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை ரிச் பூஸ்டர் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் தர்ஷினி தலைமை வகித்தார். 1ஏக்கருக்கு 2கிலோ வீதம் 200லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கும் போது பூ பிடிக்கும் திறன் அதிகரிக்கும். விளைச்சல் 15சதம் வரை கூடும். வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும். இலைகளில் நன்கு ஒட்டுவதற்காக ஒட்டும் திரவம் சேர்க்க வேண்டும். பூ பூக்கும் பருவத்தில் அடிப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும் உள்ளிட்ட நிலக்கடலை ரிச் பூஸ்டர் பயன்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் சத்யா செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பிரபாவதி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ராஜா, கீதா உள்ளிட்டோர் செய்தனர்.

The post நிலக்கடலை சாகுபடியில் ரிச்பூஸ்டர் செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : RichBooster ,Sivagangai ,Atma ,Dachanbudhupatti ,Sivaganga ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்