×

ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு 30லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை

புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 30லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றது. இந்த குழுவானது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்து சட்ட ஆணையத்திடம் பட்டியலிட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு வசதி, இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தேவை, முன்கூட்டியே உற்பத்தி செய்யும் இசிஐஎல் மற்றும் பிஇஎல் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு 30லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கன்ட்ரோல் யூனிட், ஒரு வாக்களிக்கும் இயந்திரம் மற்றும் வாக்களிப்பை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவற்றை கொண்டதாகும். இதன்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 30லட்சம் கன்ட்ரோல் யூனிட், 43லட்சம் வாக்குப்பதிவு இயந்திரம், 32லட்சம் விவிபேட் தேவையாகும்.

 

The post ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு 30லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Lok Sabha ,Legislative Assembly ,New Delhi ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...