×

சக வீரருக்காக ஓடிஓடி உழைப்பவர் கோலி: வார்னர் பேட்டி

புதுடெல்லி: உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த வெற்றிக் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறுகையில், இன்றைய நாள் மேக்ஸ்வெல்லுக்கு ஸ்பெஷலானது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டி சவால் நிறைந்தது. அந்த ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாடுவதற்கு சிறிது கூடுதல் நேரம் தேவைப்பட்டது. அதனால் மீண்டும் அடிப்படையான விஷயங்களை தான் செய்தோம். இந்த சூழலில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரியும். ஸ்டீவ் ஸ்மித் ரன் சேர்ப்பதற்காக நான் 2 ரன்கள் எடுக்க ஓடினேன். ஆனால் அவர் என்னை ஓடியே களைப்படைய வைத்துவிட்டார்.

இது என் நினைவில் நீண்ட நாட்களுக்கு நிச்சயம் இருக்கும். நான் எப்போதும் எனது பிட்னஸில் பெருமிதம் கொண்டிருப்பேன். இன்று நான் செய்ததை விராட் கோலி எப்போதும் செய்வார். சக வீரருக்காக ஓடி ஓடி ரன்கள் எடுப்பார். நாங்கள் வாழ்வதே உலகக்கோப்பையை வெல்வதற்காக தான். ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிச்சயம் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டும். உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் பாண்டிங் பெயர்களுக்கு நடுவில் இருப்பது பெருமையளிக்கிறது. ஏனென்றால் அவர்களின் ஆட்டங்களை பார்த்து தான் வளர்ந்திருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு பின்னரும் இதனை நினைத்து மகிழ்ச்சியடைவேன்’’ என்றார்.

The post சக வீரருக்காக ஓடிஓடி உழைப்பவர் கோலி: வார்னர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Goalie ,Warner ,New Delhi ,David Warner ,Netherlands ,World Cup ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு