சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஏசிக்கு தேவையான பொருட்கள் விற்கும் மொத்த விற்பனை கடை உள்ளது. காலை 5 மணிக்கு திடீரென மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஏ.சி.க்கு தேவையான பொருட்கள் வெடித்து சிதறியது. 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
The post சென்னை ராயப்பேட்டையில் ஏ.சி. உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.