×

கர்நாடகாவில் பனி மூட்டம் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 12 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கோரண்ட்லாவில் இருந்து 3வயது குழந்தை, 4 பெண்கள் என மொத்தம் 14 பேர் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கபள்ளபூர் மாவட்டம் பாகெப்பள்ளிபகுதியில் அதிக பனி மூட்டம் நிலவியது. முன்னால் செல்ல வகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டல் நிலவியது.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் காண்கிரீட் லாரி, டாடா சுமோ ஒட்டுனருக்கு தெரியாததால் அதிவேகமாக வந்த டாடா சுமோ கார் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர் உயிரிழ்ந்தனர்.

தசரா விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு பெங்களூரு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிக்கபள்ளபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகேஸ் தலைமையில் ஏராளமான போலிசார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post கர்நாடகாவில் பனி மூட்டம் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 12 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Chikkapallapur ,Korandla, Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!