×

போர் நிறுத்தம் செய்ய முடியாது என இஸ்ரேல் பிடிவாதம்..200 பணையக் கைதிகளை விடுவிக்க நிபந்தனைகளை அடுக்கிய ஹமாஸ்!!

ஜெருசலேம் : ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்குள் தரைவழி படையெடுப்பை முன்னெடுக்க தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதனிடையே பணைய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 20வது நாளை எட்டியது. இதுவரை காசாவில் பலியோனார் எண்ணிக்கை 6,546 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,704 குழந்தைகள். 17,439 பேர் காயமடைந்துள்ளனர். போரில் காயமடைந்தவர்கள் கொத்து கொத்தாக மருத்துவமனைக்கு வரும் நிலையில், அங்கு எரிபொருள், மருந்துகள் இல்லாமல் டாக்டர்கள் செய்வதறியாது உள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுக்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். படைபலம், ஆயுதங்கள் உள்ளிட்ட மற்ற விவரங்களை தற்போது கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுமார் 200 பணைய கைதிகளை மீட்பதில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே ஹமாஸ் பிடியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பணைய கைதிகளில் 22 பேர் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துவிட்டதாக ஹமாஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது தாக்குதலின் தீவிரத்தை குறைத்து கொள்ளாதவரை பணைய கைதிகளை விடுவிப்பது பற்றி யோசிக்க முடியாது என நிபந்தனை விதித்துள்ள ஹமாஸ், நிவாரண உதவிகள் காசாவிற்குள் வருவதை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டத்தை கைவிடுவதோடு, ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.

The post போர் நிறுத்தம் செய்ய முடியாது என இஸ்ரேல் பிடிவாதம்..200 பணையக் கைதிகளை விடுவிக்க நிபந்தனைகளை அடுக்கிய ஹமாஸ்!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Jerusalem ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...