×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ₹48.33 கோடியில் 37,803 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்: விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

தாம்பரம், அக்.26: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ₹48.33 கோடி மதிப்பீட்டில் 37,803 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படியும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் எரிசக்தி சேமிப்பை நோக்கமாக கொண்டு எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் ₹55.81 கோடி மதிப்பீட்டில் எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 37,803 எண்ணிக்கைகளில் சோடியம் விளக்குகள், சிஎப்எல் விளக்குகள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் 5,099 எல்இடி விளக்குகள் என மொத்தம் 42,902 மின்விளக்குகள் உள்ளது.

மேலும் மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ₹48.33 கோடி மதிப்பீட்டில் 20 வாட்ஸ் திறன் கொண்ட 19,504 எல்இடி விளக்குகள், 70 வாட்ஸ் திறன் கொண்ட 8,362 எல்இடி விளக்குகள், 120 வாட்ஸ் திறன் கொண்ட 9,185 எல்இடி விளக்குகள், 200 வாட்ஸ் திறன் கொண்ட 752 எல்இடி விளக்குகள் என மொத்தம் 37,803 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் 1,450 எல்இடி விளக்குகள், 2வது மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் 5,230 எல்இடி விளக்குகள், 3வது மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் 3,970 எல்இடி விளக்குகள், 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் 4,475 எல்இடி விளக்குகள், 5வது மண்டலத்துக்கு உட்பட்ட 13 வார்டுகளில் 1,201 எல்இடி விளக்குகள் என 5 மண்டலங்களிலும் 16,326 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 21,477 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த 2022 – 2023ம் நிதியாண்டின் 15வது நிதிக்குழு மானிய நிதியில் ₹1 கோடி மதிப்பீட்டில் பல்லாவரம் ஜிஎஸ்டி பிரதான சாலை, எம்ஐடி மேம்பாலம் மற்றும் பான்ட்ஸ் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் 130 மின்கம்பங்களுடன் மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது என தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ₹48.33 கோடியில் 37,803 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்: விரைவில் பயன்பாட்டுக்கு வரும் appeared first on Dinakaran.

Tags : Tambaram Municipal Corporation ,Tambaram ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு...