×

கொட்டகுடி ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர் மூக்கறை பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க தடை

போடி: போடி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் போடிநா யக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராம ங்கள் அதிகளவில் உள்ளது. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையாக உயர்ந்த போடி மெட்டு ம ற்றும் குரங்கணி மலைப் பகுதிகளு ம் இருக்கிறது. இம்மலைப் பகுதியில் அண்டைய மாநிலமான கேரளாவும் சேர்ந்திப்பதால் பெய்கின்ற மழை அவ்வப்போது அடிக்கடி போடி மலை மற்றும் அடிவாரப்பகுதிகளிலும் பெய்யும். கடந்த ஒரு மாதமாகவே அவ்வப் போது சிறு தூறல், சற்று கன மழை என பெய்து வந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொட்டகுடி ஆற்றில் சற்று வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடியது. இதனால் போடி முந்தல் சாலையில் உள்ள கொட்டகுடி ஆற்றில் உள்ள மூக்கறைப் பிள்ளையார் மெகா தடுப்பணையில் அணையை தாண்டி வெள்ளம் கரைபுரண்டது. அப்படியே தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் படிப்படியாக அணையில் வெள்ளமும், கொட்டகுடி மெகா ஆ ற்றிலும் தண்ணீரின் வேகம் குறைந்தது. இதற்கிடையில் ஆங்காங்கே இருக்கின்ற கண்மாய் குளங்களுக்கு மழைநீர் கொட்டகுடி ஆற்றின் மூலமாக சென்று சேர்ந்துள்ளது.

 

The post கொட்டகுடி ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர் மூக்கறை பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kottakudi River ,WESTERN MOUNTAIN ,BODINA YAKANUR ,Tamil Nadu ,Kerala ,
× RELATED தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!