×

குண்டும், குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கும் மூணாறு-விரிபாறை சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மூணாறு: பழைய மூணாறில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாங்குளம். இது சுற்றுலா பயணிகளின் பிரபலமான இடம் ஆகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பழைய மூணாறில் இருந்து லட்சுமி எஸ்டேட் மற்றும் விரிபாறை வழியாக மாங்குளம் செல்லலாம். மூணாறில் இருந்து மாங்குளத்துக்கும், மாங்குளத்திலிருந்து மூணாறுக்கும் செல்லும் எளிதான சாலையாகும் இது. இந்த நிலையில் மூணாறு-விரிபாறை சாலை பல வருடங்களாக சீரமைக்க படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.லட்சுமி எஸ்டேட் மற்றும் விரிபாறை பகுதிகளில் ஏராளமான தோட்டத் தொழிலாளிகள் வசித்து வருகின்றனர்.

 

The post குண்டும், குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கும் மூணாறு-விரிபாறை சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Munnar-Viriparai road ,Munnar ,Mankulam ,Old Munnar ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்