×

நவராத்திரி நிறைவு விழாவில் பூமாயி அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரியின் நிறைவு விழாவையொட்டி அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புத்தூர் ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில் கடந்த அக்.15ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. விழாவையொட்டி கோயிலில் விதவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது. நவராத்திரியின் முதல் நாளில் உற்சவ அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்று மாலையில் லட்சார்ச்சனை தொடங்கியது.

 

The post நவராத்திரி நிறைவு விழாவில் பூமாயி அம்மன் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Poomai Amman Temple ,Navratri ,Tiruputhur ,Sri Poomayi Amman Temple ,Tiruputhur, ,Amman Ambu Eithal ,
× RELATED திருப்புத்தூரில் வரலாற்று...