×

அய்யலூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேடசந்தூர்: அய்யலூர் கடவூர் பிரிவு சாலையில் உள்ள முருகன் கோயில் மண்டபத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வடக்கு கிழக்கு ஒன்றியம் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் நா.க.நிலவளன் தலைமை வகித்தார். அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் கருப்பசாமி, மாவட்ட தலைவர் மகுடீஸ்வரன் முன்னிலை வகித்தனர். முகாமில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் பாலமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post அய்யலூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Ayyalur ,Vedasandur ,Dindigul West District ,North East Union ,Murugan Temple Hall ,Kadavur Division Road ,Dinakaran ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...