×

கனடாவில் இன்று முதல் மீண்டும் விசா சேவை: இந்திய தூதரகம் அறிவிப்பு

டொராண்டோ: கனடாவில் சில விசா சேவைகளை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம் சாட்டினார். இதனால் இருநாடுகள் இடையே தூதரக உறவு முற்றிலும் சீர்குலைந்தது. மேலும் கனடா மக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தது. இதையடுத்து இருநாட்டு உறவுகளை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு கட்டமாக மீண்டும் கனடாவில் விசா சேவையை தொடங்குவதாக இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரக ட்விட்டர் தளத்தில்,’ கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று முதல் நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் கருத்தரங்கு விசா சேவைகள் மீண்டும் தொடங்கும்’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனடாவில் இன்று முதல் மீண்டும் விசா சேவை: இந்திய தூதரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Canada ,Indian embassy ,Toronto ,India ,Dinakaran ,
× RELATED கனடா சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, பேரக்குழந்தை பலி