×

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பு: ஐநாவில் இந்தியா கவலை

நியூயார்க்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரினால் நாள்தோறும் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் , இந்தியாவுக்கான துணை நிரந்தர தூதர் ரவீந்திரா பேசியதாவது; இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. நடந்து வரும் மோதலினால் அதிகளவிலான பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலைக்கொண்டுள்ளது. மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயமாகும். அனைத்து தரப்பினரும் பொதுமக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நம்பகமான-நேரடியான பேச்சுவார்த்தையை உடனடியாக, மீண்டும் தொடங்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக இருநாடுகளும் தீர்வு காண்பதற்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது. இவ்வாறு பேசினார்.

* பாக்.கிற்கு கண்டனம்

மத்திய கிழக்கு நாடுகள் குறித்து பேசிய ஐநாவிற்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இருந்தார். இதற்கு இந்தியாவிற்கான துணை நிரந்தர தூதர் ரவீந்தரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கருத்துக்களை அவமதிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், காலத்தின் நலனுக்காக ஒரு பதிலுடன் அவற்றை கண்ணியப்படுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பு: ஐநாவில் இந்தியா கவலை appeared first on Dinakaran.

Tags : Israel-Palestine conflict ,India ,UN ,New York ,Israel ,Hamas ,United Nations ,Israel-Palestine ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...