×

பெண் ஓதுவார்கள் ஆதினத்தில் 5 ஆண்டு பயின்றிருக்க வேண்டும்: தருமபுரம் ஆதீனம் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் 1038வது சதய விழாவையொட்டி ராஜராஜ சோழன் சிலைக்கு 27வது தருமபுரம் ஆதீனம் லமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் அளித்த பேட்டி: மாமன்னன் ராஜராஜ சோழன் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது சிறப்புக்குரியது. செயலி மூலமாக பன்னிரு திருமுறைகளை வெளியிட்டுள்ளோம். பெண் ஓதுவார்கள் நியமனத்திற்கு ஆதினத்தில் 5 ஆண்டு முறையாக பயின்று இருக்க வேண்டும். ஆண்டுக்கு 40 பதிகங்கள், 4,000 பாடல்கள் படிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் படித்து தகுதியானவர்களை ெபண் ஓதுவார்களாக நியமித்தால் ஆட்சேபனை இல்லை. தகுதியோடு கூடியதாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பெண் ஓதுவார்கள் ஆதினத்தில் 5 ஆண்டு பயின்றிருக்க வேண்டும்: தருமபுரம் ஆதீனம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,1038th Sadaya festival ,Thanjavur Big Temple ,27th Dharumapuram Adhinam ,Lamasilamani ,Desika ,Rajaraja Cholan ,
× RELATED விண்ணை முட்டிய ஓம் நமச்சிவாய கோஷம்...