×

வனப்பகுதியில் அனுமதியின்றி 2 டன் தைலமரம் வெட்டிய அதிமுக கவுன்சிலர் கணவர்

வேலூர்: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் அனுமதியின்றி 2 டன் எடையுள்ள தைலமரம் வெட்டிய அதிமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், கல்லுட்டை 13வது வார்டில் அதிமுகவை சேர்ந்த தேவி கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் சிவகுமார்(50), இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், அதிமுக பெண் கவுன்சிலர் தேவியின் கணவன் சிவகுமார் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று வனத்துறைக்கு சொந்தமான தைலமரத்தை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்றுள்ளார்.

இதுகுறித்து, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தை கைப்பற்றினர். மேலும், சுமார் 2 டன் எடை கொண்ட தைலமரத்தின் மதிப்பு ரூ.5 ஆயிரம் வரை இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, சிவகுமார் வனத்துறையினர் வருவதையறிந்ததும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்த வனத்துறையினர் தலைமறைவாக உள்ள சிவகுமாரை தேடி வருகின்றனர்.

The post வனப்பகுதியில் அனுமதியின்றி 2 டன் தைலமரம் வெட்டிய அதிமுக கவுன்சிலர் கணவர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vellore ,ADMK ,Odugathur ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...