நெல்லை, அக்.25: பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டுக் குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் நல்லாசியுடன் மஞ்சள் கலந்த அரிசியில் தமிழின் முதல் எழுத்தான ”அகர”த்தை மழலையர்களின் கைகளைப் பிடித்து எழுத வைத்தார். இதனைத் தொடர்ந்து மழலையர் பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் வகுப்பறையினைப் பட்டாம்பூச்சியை மையப்படுத்தி அலங்கரித்தும், விளையாட்டு முறையில் குழந்தைப் பாடல்களைப் பாடியும் குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
மேலும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி மகிழ்விக்கும் விதமாகப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மழலையர்களின் தாத்தா, பாட்டியர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.
The post புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.